Lashmi Menon Is Getting Ready For Her Wedding
கேரளாவை சேர்ந்த லஷ்மி மேனன் சினிமாவிற்கு டாடா சொல்லிவிட்டு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Lashmi Menon Is Getting Ready For Her Wedding : கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் லஷ்மி மேனன். இவரின் அழகிய கண்ணால் அனைவரும் கட்டிப்போட்டார்.

இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அடுத்த அடுத்த படங்களில் ஒப்பந்தமானார் லஷ்மி மேனன்.

சசிகுமார் மற்றும் லஷ்மி மேனன் இணைத்து நடித்த சுந்தரபாண்டியன், மிக பெரிய அளவில் லஷ்மி மேனனுக்கு பாராட்டை பெற்று தந்தது.

இந்த படத்தில் லஷ்மி மேனனுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரமாக அமைந்து இருந்தது. அதற்கு பிறகு நடித்த படங்கள் எதுவும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை.

இதற்கிடையில் நடிகர் விஷாலுடன் காதல் கொண்டதாக கிசுகிசுக்கப்பட்டார். படங்கள் எதுவும் சரியாக அமையாததை தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினர்.

தற்போது 22 வயதாகவும் லஷ்மி மேனனுக்கு அவரின் குடும்பத்தினர் மாப்பிளை பார்த்து வருவதாகவும், லஷ்மி மேனன் திருமணம் செய்து கொண்ட சேட்டிலாக போவதாகவும் தகவல் வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here