Laser Treatment to Ramya Pandian

ரம்யா பாண்டியனுக்கு லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Laser Treatment to Ramya Pandian : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்பில்லாததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

மேலும் இவர் கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்றதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீஸனிலும் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக அவரது சகோதரியின் காஸ்ட்யூம் டிசைனரான திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.