கேரளா மாவட்டத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
கேரளா மாவட்டம் வயநாட்டில் திடீர் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இது மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து நான்கு நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகமாகி கொண்டு இருக்கிறது. இது மக்களிடையே பெரும் சோகத்தையும் ,துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் நிவாரண நிதியாக கேரள முதல்வருக்கு 50 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பத்து லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.