சின்னத்திரையில் தென்றல் சீரியல் நடித்தவர் நிலானி. மேலும் இவர் தற்போது பிரியமானவள் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது போலீஸ் உடையில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதால் கைது செய்யப்பட்டார்.

இவர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதால் சின்னத்திரை உதவி இயக்குனரான லலித் குமார் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் லலித் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் நிலானியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு இருந்தார்.

இது குறித்து தற்போது நிலானி பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் லலித்குமார் நல்லவன் இல்லை, பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நான் என் கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வளசரவாக்கம் அஷ்டலக்ஷ்மி நகரில் வசித்து வருகிறேன், லலித் காந்தி என்னுடைய வீட்டின் அருகில் குடியேறினார். அப்போது தான் நாங்கள் நண்பர்களாக அறிமுகமானோம்.

என்னுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது போன்ற வேளைகளில் அவரால் எனக்கு உதவி கிடைத்தது.  நான் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதை அறிந்து நானும் ஆதரவர்றவன் என கூறி என்னிடம் நெருங்கி பழக ஆரம்பித்தார்.

எனக்கும் என்னுடைய குழந்தைகளுக்கும் ஒரு துணை வேண்டும் என்பதால் நானும் அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன், அதன் பின்னர் லலீத்துக்கு பல பெண்களிடம் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதனால் அவரை விட்டு விலகி வீட்டை விட்டே துரத்தினேன். அப்படி இருந்தும் அவர் என்னை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அதனால் தான் போலீசில் புகார் அளித்தேன் என கூறியுள்ளார். மேலும் நான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைதாகி இருந்த போது என்னை ஜாமினில் எடுக்கவும் உதவி செய்தார்.

அதன் பின்னர் மீண்டும் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார் ஆனால் நான் முடியாது என மறுத்து விட்டேன், அவருக்கு பல பெண்களிடம் தொடர்பு இருப்பது அவரது குடும்பத்தாருக்கும் தெரியும் எனவும் நிலானி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவருடன் நெருக்கமாக இருப்பது போல எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறும்படம் எடுக்க போவதாக கூறி எடுக்கப்பட்ட புகைப்படங்கள். என்னுடைய முகநூல் பக்கத்தின் தகவல்களை திருடி பதிவிட்டுள்ளார் எனவும் கூறி கலங்கியுள்ளார். எது உண்மை என்பதை சட்டம் தான் முடிவு செய்ய வேண்டும்.