லால் சலாம் திரைப்படத்தில் நடிக்கும் ரஜினிகாந்தின் சிறப்பு தோற்றத்தின் பெயரை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் “லால் சலாம்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோடில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருக்கும் நிலையில் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சிறப்பு தோற்றத்தின் பெயரை போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அப்போஸ்டரில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் ‘மொய்தீன் பாய்’ என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது. இதுவரை எந்த படத்தில் காணாத வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் ரஜினியின் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.