Lal Revealed Secrets of Karnan

கர்ணன் படத்தில் டப்பிங் பேசாதது ஏன் என முதன் முறையாக காரணத்தை உடைத்துள்ளார் நடிகர் லால்.

Lal Revealed Secrets of Karnan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் கர்ணன்.

கர்ணன் படத்தில் டப்பிங் பேசாதது ஏன்? முதல்முறையாக காரணத்தை உடைத்த லால்

மாரி செல்வராஜ் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு அடுத்ததாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற கதாபாத்திரங்கள் என்றால் அது நட்டி நட்ராஜ் மற்றும் லால் கதாபாத்திரம் தான். கர்ணன் தனுஷின் நலம் விரும்பியாக நடித்திருந்த லாலின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக இவர் வயதான பாட்டியிடம் காசைத் திருடும் காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய லால் இத்திரைப்படத்திற்கு டப்பிங் பேச மறுத்துவிட்டார். அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த படத்திற்காக டப்பிங் பேசுவதற்காக தான் சென்னை வந்ததாகவும் ஆனால் தன்னால் திருநெல்வேலி பாஷை சரியாக பேச முடியாததால் வேறொருவரை வைத்து டப்பிங் செய்து கொள்ளுமாறு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்ததாக கூறியுள்ளார்.

திருநெல்வேலி பாஷை தெரியாமல் டப்பிங் பேசினால் அந்த கதாபாத்திரத்தின் தன்மை குறைந்துவிடும் என்பதால் தான் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.