Lakshmy Ramakrishnan Reply to Vanitha
Lakshmy Ramakrishnan Reply to Vanitha

உடை மாற்ற மாதிரி புருஷன் மாதிரி உனக்கு கல்யாணம் பத்தி என்ன தெரியும் என வனிதா விஜயகுமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Lakshmy Ramakrishnan Reply to Vanitha : சமூக வலைதளங்களில் பக்கங்களைத் திறந்தாலே வனிதா விஜயகுமார் திருமணத்தைப் பற்றிய கருத்துக்கள் தான் மொத்த இடத்தையும் ஆக்கிரமித்து வருகின்றன.

தன்னுடைய மூன்றாவது திருமணத்தைப் பற்றி பேசும் ஒவ்வொரு வரியும் கண்டபடி விமர்சித்து வருகிறார். அதிலும் குறிப்பாக லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் வீடியோவில் தகாத வார்த்தைகளால் அசிங்க அசிங்கமாக பேசினார்.

வனிதாவின் இந்தச் செயல் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியது. பிரபலங்கள் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவில் முதல் வாய்ப்பு கொடுத்தவரையே மறந்த சிவகார்த்திகேயன் – பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்.!

மேலும் வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனை குறிப்பிட்டு உங்களுக்கு இது தான் கடைசி வரை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதீர்கள் என டுவிட் செய்திருந்தார்.

இதனையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்தப் பதிவில் திருமணம், உறவு குறித்து உனக்கு என்ன தெரியும்?

எனக்கு 36 வருடமாக கணவராக இருக்கும் டாக்டர் ராமகிருஷ்ணனை பற்றி பேச உனக்கு என்ன தைரியம் இருக்கு. திருமணம் உறவு குறித்து உனக்கு என்ன தெரியும்? அதற்கு சரியான ஸ்பெல்லிங்காவது தெரியுமா? உன் பிள்ளைகளுக்கு என்ன கற்றுக் கொடுக்கப் போகிறாய்? நீ எப்படி அவர்களுக்கு நல்ல உதாரணமாக இருப்பாய்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் உடை மாற்றுவது போல புருஷனை மாற்றும் உனக்கு எல்லாம் இதைப்பற்றி என்ன தெரியப்போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீ என்னை பற்றி தவறாக பேசுவதால் எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. எப்போதும் எங்களுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளார்.