Lakshmi Stores

Lakshmi Stores : அடேய் நீங்களுமாடா? ஆரம்பிச்சிடீங்களா என லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலை நெட்டிசன்கள் விளாசி எடுத்து வருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று லட்சுமி ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் குஷ்பூ, தொகுப்பாளி நக்ஷத்ரா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை தொகுப்பாளி நக்ஷத்ராவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த ப்ரோமோவில் நக்ஷத்ரா குடித்து விட்டு ஆட்டம் போடுவது போல இருப்பதால் முத்த காட்சி, முதலிரவு காட்சி இது அது என எல்லாத்தையும் தாண்டி இப்போ இதையும் ஆரம்பிடீங்களா என இந்த சீரியலை விளாசி எடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here