வனிதா மற்றும் அவர் ஸ்டார் ஆகியோர் கன்னத்தோடு கன்னம் ஒட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கலாய்த்து உள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Lakshmi Ramakrishnan Coments to Vanitha Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்ட இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

பவர் ஸ்டார் சீனிவாசனுடன் இணைந்து பிக்கப் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக இருவரும் மாலையும் கழுத்துமாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த புகைப்படத்தை தொடர்ந்து பவர் ஸ்டாருடன் மாடர்ன் உடையில் கன்னத்தோடு கன்னம் வைத்து ஒட்டியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வனிதா விஜயகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு டேக் செய்திருந்தார். இதனைப் பார்க்கும்போது மிகவும் காமெடியாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எனக்கு டேக் செய்யாதீர்கள் என கூறியுள்ளார். பின்னர் இந்த கமெண்ட்டுகளை நீக்கிவிட்டார்.

இதனைப் பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆதரவாளர்கள் நீங்கள் எதற்கு வனிதாவின் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்கிறீர்கள். பின்னர் அவர் உங்களை தரக்குறைவாக பேசுவார் என்று கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.