Laxmi Menon Latest Photos

தூங்கும் போது கூடவா இது தேவை என லட்சுமிமேனன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிரிப்பாய் சிரித்து வருகின்றனர்.

Lakshmi Menon Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லட்சுமி மேனன். பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கும்கி படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தான் இவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக புலிகுத்தி பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் நேரடியாக சன் டிவியில் ரிலீஸ் ஆகியிருந்தது.

மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப்புடன் தூங்குவது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் தூங்கும் போது கூடவா மேக்கப் வேணும், இதை பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது என கிண்டலடித்து வருகின்றனர்.