கோட் படம் குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் லைலா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம்,கல்பாத்தி எஸ் சுரேஷ் , கல்பாத்தி எஸ் கணேஷ்,ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, யோகி பாபு, பார்வதி நாயர், VTV கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் இந்த படம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடித்த பிரபலங்கள் பல சுவாரசிய தகவலை தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வரும் நிலையில் தற்போது லைலா பேசியுள்ளார்.
அதில், கோட் படத்தில் படப்பிடிப்பிற்காக திருநெல்வேலிக்கு சென்றிருந்தபோது அங்கு இருந்த ரசிகர்கள் என்னை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைத்தார்கள் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.இது மட்டுமில்லாமல் எங்க காலத்தில் சோசியல் மீடியா வசதி பெரியதாக இல்லை அதனால் ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு பெரிதாக அமையவில்லை என்றும்,மேலும் கோட் படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று கூறியுள்ளார்.