Nayanthara
Nayanthara

Nayanthara : நடிகர்களின் ஆளூமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

ஆனால் தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை ஒரு நடிகை உச்ச இடத்திலேயே நிற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

நடிகை நயன்தாராவை விமர்சனம் செய்தது வருத்தம் அளிப்பதாக மநீம கட்சி தலைவர் வருத்தம்!

தன் கடின உழைப்பாலும் அழுத்தமான கதாபாத்திர தேர்வாலும் இந்த அசாத்தியத்தை சாத்தியமாக்கியிருக்கும் நயன்தாரா,

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையும் மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் 8 படங்கள் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே இவர் நடிப்பில் விஸ்வாசம், ஐரா ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் கொலையுதிர் காலம், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

இதுபோக தளபதி 63, தெலுங்கில் சேரா ரெட்டி, மலையாளத்தில் லவ் ஆக்ஷன் டிராமா, ரஜினியின் தர்பார் என நயன்தாரா ரசிகர்களுக்கு இந்த ஆண்டு முழுக்கவே விருந்துதான்.

(தர்பார் படம் பொங்கல் ரிலீஸ் என்றாலும் அதன் படப்பிடிப்பை இந்த ஆண்டே அவர் முடித்துவிடுவார்).