bribe
திருமண நிதியுதவி பெறுவதற்காக அரசு பெண் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lady govt officer got bribe viral video – வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு அடுத்துள்ள அங்கநாதவலசை கமேட்டரி எனும் பகுதியில் வசிப்பவர் குமரேசன். இவர் ஒரு வருடத்திற்கு முன்பு சத்யா என்கிற பெண்ணை திருமணம் செய்தார். தமிழக அரசின் திருமண நிதியுதவியை பெற விரும்பிய குமரேசன் இதற்காக கந்திலி ஒன்றிய திருமண திட்ட விரிவாக்க அலுவலகத்தில் உள்ள ராமக்கா என்கிற அதிகாரியிடம் மனு அளித்திருந்தார்.

ஆனால் ஒரு வருடமாகியும் அவருக்கு நிதியுதவி வழங்கப்படவில்லை. லஞ்சம் கொடுக்காததால் ராமக்கா காலம் தாழ்த்தி வருவது குமரேசனுக்கு தெரிய வந்தது. மேலும், அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட ராமக்கா தனக்கு ரூ. 3500 லஞ்சம் கொடுத்தால் உடனடியாக நிதியுதவிக்கு ஏற்பாடு செய்கிறேன் எனக்கூறியதாக தெரிகிறது.

அவரை கையும் களவுமாக பிடிக்க நினைத்த குமரேசன் அவருக்கு ரூ.3500 கொடுப்பதை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்தார். அதன்பின் அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் மதுரை வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு பெண் அதிகாரி ரூ.200 லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியானது. தற்போது ராமக்கா எனும் அதிகாரி சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Video credit – Minnambalam