Lady Fingers Pakkoda

Lady Fingers Pakoda : பக்கோடாவில் வெங்காய பக்கோடா தான் பெரும்பாலும் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் வெண்டைக்காயை வைத்து சுவையான பக்கோடா தயார் செய்யலாம்.

அது எப்படினு இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் – 1/4 கிலோ

கடலை மாவு – 1 கப்

அரிசி மாவு – 2 ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

எண்ணை – பொரித்து எடுக்க

பெருகாயம் – சிறிதளவு

உப்பு – தேவைக்கு

செய்முறை :

கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், தேவைக்கு ஏற்ப்ப உப்பு மற்றும் பெருகாயம் சேர்த்து சிறுதளவு தண்ணீர் கலந்து பொரித்து எடுக்க கூடிய பதத்தில் கலவையை தயார் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி அந்த கலவையில் போட்டு நன்கு மசாலா வெண்டைக்காயில் சேரும் படி கலந்து கொள்ள வேண்டும்.

பின் கடாயில் தேவைக்கு எண்ணை ஊற்றி நன்கு சூடானதும் அதில் கண்டு வைத்துள்ள கலவையை கிள்ளி போட்டு பொரிது எடுத்தால் வெண்டைக்காய் பக்கோடா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here