நவரசா திரைப்படத்தில் அசத்தும் பெண் கதாபாத்திரங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Lady Characters in Navarasa : மனிதனின் அக உணர்வுகளை முன்னிறுத்தி சொல்லப்படும், 9 வெவ்வேறு வித்தியாசமான கதைகள் அடங்கிய, ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தை, சமீபத்தில் அறிவித்துள்ளது Netflix நிறுவனம்.

தமிழில் உருவாகியிருக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை, மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு 9 வித்தியாசமான கதைகளங்களில், இதுவரை பார்த்திராத கோணத்தில், அழகான கதைகளை சொல்கிறது. இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் கதையின் ஆழத்தை வெளிபடுத்துவதில், கதை சொல்லலின் அடுத்த நிலைக்கு இப்படத்தை எடுத்து செல்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில், வங்கிகளுக்கு 9 நாள் விடுமுறை அறிவிப்பு

“நவரசா” திரைப்படத்தில் 9 கதைகளிலும் பெண் கதாப்பத்திரங்கள் ஆச்சர்யப்படும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிரி (கருணை) கதையில் ரேவதி கதாப்பாத்திரமான “சாவித்திரி”

“சாவித்திரி” பாத்திரம் ஒவ்வொரு காட்சியிலும் முதிர்வு பெற்று காட்சிக்கு காட்சி மாறிக்கொண்டிருக்கும், ரசிகர்கள் பார்க்க ஏங்கும் ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். சாவித்திரி ஒரு மங்களகரமான பக்தி கொண்ட பெண் கதாப்பாத்திரம். படத்தில் துக்கத்திற்கும் அறத்திற்கும் இடையில் தவித்து, சரியான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு பாத்திரம் ஆகும்.

இண்மை ( பயம் ) கதையில் பார்வதி கதாப்பாத்திரமான “வஹிதா’. நடிகை பார்வதி இந்திய சினிமாவில் பல மாறுபட்ட துணிச்சலான பாத்திரங்களில் நடித்தன் மூலம், உலக அளவில் புகழை குவித்தவர். இப்படத்தில் ஒரு எளிமையான குடும்பத்திலிருந்து வந்து, பணத்திற்காககவும் சொத்திற்காகவும், வயதான பணக்காரரை திருமணம் செய்து கொண்ட பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது வாழ்க்கையைச் சுற்றியுள்ள பல உண்மைகளைக் தெரிந்து கொள்ளும்போது, வாழ்க்கை அவரது செயல்களை கேள்விக்குள்ளாக்குகிறது.

கிடார் கம்பி மெலே நின்று (காதல்) கதையில் ப்ரயகா ரோஸ் மார்டின் கதாப்பாத்திரமான “நேத்ரா”. நேத்ரா ஒரு மிகச்சிறந்த பாடகி நவநாகரீக பெண். தனக்கு சரியென பட்டதை துணிந்து செய்யும் கதாப்பாத்திரம். தனக்கு வேண்டியதை தேடி அடையும் பெண். சுந்தந்திரமாக இயங்கும் அனைவரும் விரும்பும் மாடர்ன் பெண்.

பாயாசம் (வெறுப்பு) கதையில் அதிதி பாலன் கதாப்பாத்திரமான “பாக்யலட்சுமி”மிக இளம் வயதில் விதவையானதால், சமூகம் அவளிடம் பாராபட்ச காட்டும் நடவடிக்கைகளால், மனதளவில் அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண். அவள் நேர்மறை எண்ணங்களால், அவள் முன் உள்ள தடைகளை கடந்து, நம் அனைவருக்கும் முன்னுதாரண பெண்ணாக, நம் கண்களில் நீர் பொங்கும் கடின வாழ்க்கையை கடந்து, சாதித்து காட்டும் “பாக்யலட்சுமி”கதாப்பாத்திரத்தில் அதிதி பாலன் நடித்துள்ளார்.

பாயாசம் (வெறுப்பு) கதையில் ரோகிணி கதாப்பாத்திரமான “வாலம்பா”இறந்த முதிய கணவனான சமந்து உடைய மனைவி கதப்பாத்திரம் தான் வாலம்பா. அறத்தின்நெறியில் நின்று வாழும் பெண். சரி தவறுகளை தன் வாழ்வில் தான் நம்பும் அறத்தின் வழி முடிவு செய்யும் பெண். இந்த கதாப்பாத்திரத்தில் ரோகிணி நடித்துள்ளார்.

தனுஷோட ENTRY வேற Level-ல இருக்கும்., தல தளபதியை மிஞ்சிட்டாரு – Birthday கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

துணிந்த பின் (தைரியம்) கதையில் அஞ்சலி கதாப்பாத்திரமான “முத்துலட்சுமி” தான் ஏற்கும் கதாப்பாத்திரங்களில், ஒவ்வொன்றிலும் மிகசிறப்பான நடிப்பை தரும் அஞ்சலி,தொலைந்து போன வெற்றியின் காதல் மனைவியாக நடித்துள்ளார். தனது காதல் கணவனின் வருகைக்காக ஏங்கும் பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்தும், இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது குறித்தும், நடிகை ரம்யா நம்பீசன் பகிந்துகொண்டதாவது… எனது கதாப்பாத்திரத்தில் சிறு வயது தோற்றத்திலும், முதிய வயது தோற்றத்திலும் நானே நடிப்பதாக, படைப்பாளிகள் என்னிடம் கூறியபோது, எனக்கு சற்று குழப்பமாக இருந்தது. முதிய வயது தோற்றத்தை, என்னால் சரியாக செய்ய முடியுமா எனத் தயங்கினேன். இயக்குநர் பிரியதர்ஷன் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் மிகப் பொறுமையாக சொல்லிக்கொடுத்து, படப்பிடிப்பில் மிக ஆதரவாக பார்த்துக்கொண்டார். அவரால் தான் இப்படத்தில் நடிப்பது எளிமையானதாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமையான இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது, மறக்க முடியாத, மிகச்சிறந்த அனுபவம் என்றார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.