Ladies Finger Water :
Ladies Finger Water :

Ladies Finger Water :

வெண்டைக்காய் ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கியிருக்கிறது. இரவு உறங்க செல்வதற்கு முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரை பருகுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரின் பயன்கள்;

☆ வெண்டைக்காய் நார்ச்சத்து நிறைந்தது என்பதால் ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிப்பதை தடுக்கும்.

☆ சுவாசம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், வெண்டைக்காய் ஊறிய நீர் அருந்துவது நல்லது. குறிப்பாக ஆஸ்துமா கோளாறு சரியாகும். இந்த நீரை அருந்தி வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும்.

☆ சர்க்கரை நோயாளிகள் தினமும் இந்த நீரை அருந்துவதால் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்த திரவத்தை அருந்தினால் உடல் குளுமை பெறும்.

☆ கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். பெருங்குடலின் உட்பகுதியில் படிந்து பெருங்குடல் சிறப்பாக செயல்படவும் உதவும்.

☆ உணவு செரிமானத்திற்கு பிறகு இது கரையா நார்ச்சத்து ஆக மாறுவதால் குடலை பாதுகாத்து, மலக்குடலில் வரும் புற்றுநோயை தடுக்க உதவும்.

☆ எலும்புகள் வலிமை பெற்று ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கப்படும். எலும்புகள் வலிமையாக நினைப்பவர்கள், தினமும் இந்த வெண்டைக்காய் ஊறிய நீரை அருந்துவது நல்லது.

வெண்டைக்காய்;

☆ வெண்டைக்காயில் பால் சேர்த்து வேக வைத்தும் குடிக்கலாம். பிஞ்சு வெண்டைக் காயை வேக வைத்து எடுத்து நீருடன் சர்க்கரை சேர்த்து குடித்தால் இருமல், நீர்க்கடுப்பு சரியாகும்.

☆ வெண்டைக்காயை பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மையடைவதுடன், ஈறுகளில் இரத்த ஓட்டமும் தூண்டப்படும்.

☆ உணவில் அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொண்டால், பார்வை மேம்படும். ஈறு தொடர்பான நோய்கள் சரியாகும், மலச்சிக்கலும் தீரும்.

☆ வெண்டைக்காயில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இது சிறுநீரகம் பித்தப்பை கற்களை வளர செய்துவிடும். கல் பிரச்சினை உள்ளவர்கள் வெண்டைக்காயை குறைவாக சாப்பிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here