இயக்குனர் கே வி ஆனந்த் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Kv Anand Passed Away : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் வலம் வருபவர் கே வி ஆனந்த். இவர் நடிகர் சூர்யாவை வைத்து அயன், மாற்றான் மற்றும் காப்பான் என மூன்று படங்களை இயக்கியுள்ளார்.

அயன், மாற்றான், காப்பான் என சூர்யாவின் மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் கே வி ஆனந்த் காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி

அதுமட்டுமல்லாமல் கோ, கவண், அநேகன் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது 57 வயதாகும் இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் கே வி ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.