Kv Anand Exit From Navarasa

நவரச வெப்சீரிஸ் தொடரிலிருந்து சூர்யா பட இயக்குனர் ஒருவர் விலகியுள்ளார்.

Kv Anand Exit From Navarasa : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். தியாசமான காதல் கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவர். இவருடைய படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வரவேற்பும் உண்டு என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. இவர் தற்போது பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

நவரசா வெப் சீரிஸிலிருந்து விலகிய சூர்யா பட இயக்குனர் - இவருக்கும் பதில் யார் தெரியுமா??

இயக்குனராக மட்டுமல்லாமல் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக படங்களை தயாரித்து வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் வெப்சீரிஸ் தொடர் தான் நவரசா. இந்த வெப் சீரியஸ் தொடரை மொத்தம் ஒன்பது இயக்குனர்கள் இயக்குகின்றனர். அந்த ஒன்பது இயக்குனர்களில் ஒருவர் தான் கேவி ஆனந்த். இவர் சூர்யா மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதற்கு முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான மாற்றான் திரைப்படத்தின் இவர்தான் இயக்கியிருந்தார்.

தற்போது இந்த நவரசா வெப் சீரிஸ் தொடரிலிரந்துஸ் கேவி ஆனந்த் சில தவிர்க்க முடியாத காரணங்களால் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக இயக்குனர் வசந்த் இந்த வெப்சீரிஸ் தொடரில் 9 இயக்குனர்களில் ஒருவராக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இயக்க உள்ள பகுதியில் அருவி படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமான அதிதி பாலன் நடிக்க உள்ளார். இது நவரசா வெப்சீரிஸ் தொடரின் ஒரு கதையில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.