Kutty Ramesh Passes Away

நெல்லை சிவாவைதொடர்ந்து விஜய் டிவி சீரியல் நடிகர் ஒருவர் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Kutty Ramesh Passes Away : தமிழ் சின்னத்திரையில் வெள்ளித்திரையிலும் நாளுக்குநாள் பிரபலங்களின் மரணச் செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பிரபலங்கள் பலர் இறந்து வருகின்றனர். சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் தொடர்ந்து பிரபலங்கள் மரணம் அடைந்து வருவது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அமைந்து வருகிறது.

சமீபத்தில் 500க்கும் மேற்பட்ட படங்களிலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்த நெல்லை சிவா உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார்.

இவரைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தேன்மொழி பிஏ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் குட்டி ரமேஷ் உயிரிழந்ததாக விஜய் டிவி முதல் சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளது.

ஆனால் இவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. குட்டி ரமேஷ் அவர்களின் மறைவு சின்னத்திரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.