Kutty Padmini Request to Top Stars
Kutty Padmini Request to Top Stars

உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன் என ரஜினி அஜித் விஜய் ஆகியோருக்கு பிரபல நடிகை கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kutty Padmini Request to Top Stars : தற்போது கரோனா வைரஸ் காரணமாக இந்தியா ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

தமிழ் சினிமாவும் மொத்தமாக முடங்கியுள்ளது. இதனால் பல நலிவடைந்த கலைஞர்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

முருகதாஸ் பெயரில் தளபதி 65 என வெளியான புகைப்படம் – திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள், காரணம் இதுதான்.!

நடிகர் சங்கமும் இரண்டாக பிரிந்து விட்டதால் சங்கத்தில் பணம் எதுவும் இல்லாமல் யாருக்கும் உதவ முடியாமல் இருந்து வருகிறது.

இதனால் சங்கத்தில் முக்கிய பதவியில் இருக்கும் பிரபல நடிகையான குட்டி பத்மினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவ சங்கத்தில் குறைந்தது ரூ 25 கோடியாவது இருக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொருக்கும் குறைந்தது 1000 ரூபாயாவது கொடுக்க முடியும்.

ரஜினி அஜித் விஜய் கமல் போன்ற பெரிய நடிகர்கள் மனசு வைத்தால் இது நிச்சயம் முடியும். உங்களால் முடிந்த உதவிகளை தயவுசெய்து செய்யுங்கள் என கெஞ்சி கேட்டு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார் குட்டி பத்மினி.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.