Kushbhoo
28 வருடங்களுக்கு பிறகு நடிகை குஷ்பூ மீண்டும் ஹீரோயினியாக நடிக்க உள்ளாராம். இது குறித்த தகவல் தான் தற்போது ட்ரெண்டாக சென்று கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் குஷ்பூ. அதன் பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த குஷ்பூ சின்னத்திரையிலும் காலடி எடுத்து வைத்தார்.

இந்நிலையில் தற்போது சுமார் 28 வருடங்களுக்கு பிறகு குஷ்பூ நாயகியாக நடிக்க உள்ளார். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். வயசானாலும் இளம் நடிகைகளுடன் டூயட் பாடி வந்த ரஜினிகாந்த் பேட்ட படத்தில் இருந்து இளம் நடிகைகளுடன் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்தார்.

இதனால் சிறுத்தை சிவா படத்தில் குஷ்பூ நடிக்கலாம் என கூறப்படுகிறது, ஆனால் படக்குழு இன்னும் இதனை உறுதி செய்யவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.