அஜித்தை வைத்து இப்படி ஒரு படம் எடுத்தால் செம மாஸா இருக்கும் என எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் பிரபல நடிகை.

Kushboo’s Dream About Ajith Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த படத்திற்கு முன்னதாக அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து இருந்த விஸ்வாசம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் கிராமத்து நாயகனாக பட்டையை கிளப்பியிருப்பார்.

கண்ணில் ஏற்பட்ட காயம்.. அனைத்திற்கும் குட்-பை சொன்ன குஷ்பு…!

இதேபோல் முழுக்க முழுக்க கிராமத்து கதையை கதைக் களமாக கொண்ட ஒரு படத்தில் அஜித்தை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்படுவதாக பிரபல நடிகையான குஷ்பு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பாதி அளவு கிராமத்து கதை களம் கொண்ட கதையாக இருந்த விசுவாசம் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் முழுக்க முழுக்க கிராமத்து கதையாக இருந்தால் நிச்சயம் அது இன்னும் செம மாஸாக இருக்கும் என ரசிகர்கள் இப்படியான ஒரு படத்தை எதிர்பார்த்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.