இவங்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருட்கள் தரம் என குஷ்பு பதிவிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Kushboo Tweet About Corona Vaccine : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று நோய்கள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கொரானா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இவங்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருட்கள் தரணும்.. குஷ்புவின்  ட்வீட்டால் வெடித்த சர்ச்சை

இந்த நிலையில் நடிகை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரானா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் விவரங்களை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டு அவர்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருட்கள் அளிக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்கள் என கூறியுள்ளார்.

இவருடைய இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் வேலை இல்லாமல் தவித்து வரும் இந்த வேளையில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தான் உதவியாக இருக்கிறது அதையும் கொடுக்கக் கூடாது எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என குஷ்புவின் பதிவை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இவங்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருட்கள் தரணும்.. குஷ்புவின்  ட்வீட்டால் வெடித்த சர்ச்சை