Thalaivar-168
தலைவர் 168 படத்தில் குஷ்பூவுக்கு என்ன ரோல் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூவும் மீனாவும் நடிக்கின்றனர். ரஜினியின் அருமை தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

சிறுத்தை சிவா கதையில் ரெண்டு பொண்டாட்டியா? இருக்க வாய்ப்பே இல்லையே என பேச்சுகள் எழுந்திருந்த நிலையில் தற்போது அது குறித்த சில விவரங்கள் தெரிய வந்துள்ளன.

ரஜினியின் முதல் மனைவி குஷ்பூ, இவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனையால் குஷ்பூ தனியாக வாழ்ந்து வருகிறார். அதன் பின்னர் ரஜினியுடன் மீனா ஜோடி சேர குஷ்பூ ரஜினிக்கு எதிராகி பழி வாங்குவது தான் இப்படத்தின் கதை என கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் கதை அண்ணன் தங்கை பாசத்தை வைத்தும் நகரும் என்பதால் அண்ணாத்தே என டைட்டில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.