Kushboo in Without Makeup Photos

கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் விரித்துப் போட்ட தலையுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை குஷ்பு.

Kushboo in Without Makeup Photos : தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் சின்னத்திரை சீரியலில் நடித்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிஜேபிக்கு மாறி ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

தற்போது நடிகை குஷ்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கொஞ்சம் மேக்கப் இல்லாமல் தலையை விரித்து போட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ப்பா மேக்கப் இல்லாமலேயே இவ்வளவு அழகா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.