நடிகை குஷ்பூ மீண்டும் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kushboo in New Serial : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்ததோடு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாஜகவில் இணைந்தார்.

தேங்காய் சுடும் பண்டிகையின் ஐதீகம்

சன் டிவி லஷ்மி ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் திடீரென முடிவுக்கு வந்துவிட்டது. இதனையடுத்து நடிகை குஷ்பு மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அவ்னி சினிமாஸ் என்ற சொந்த பேனரில் குஷ்பு தயாரிக்கும் இந்த சீரியலில் அவரே முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

வாடிவாசல் படத்திற்காக சூர்யா எடுத்த அதிரடி முடிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.