Kushbhu About Annaththe

அண்ணாத்த பட புகைப்படத்தை வெளியிட்டு வருத்தப்பட்டு பேசியுள்ளார் நடிகை குஷ்பு.

Kushbhu About Annaththe : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 1990-களில் நாயகியாக நடித்த இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையிலும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுவரும் இவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எங்கள் குடும்பத்தில், எண்ணிக்கை ஐந்து ஆனது : தினேஷ் கார்த்திக் ‘ஸ்கோர்

பொதுவாகவே குண்டாக இருக்கும் குஷ்பு சமீபத்தில் தான் தன்னுடைய மொத்த எடையையும் குறைத்து ஒல்லியாக மாறினார். இந்த நிலையில் இவர் தற்போதைய புகைப்படம் மற்றும் அண்ணாத்த படத்தில் இருக்கும் புகைப்படத்தை ஒப்பிட்டு தற்போது இருப்பது போல்தான் அண்ணாத்த படத்தில் இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் கொஞ்சம் சமாளித்துக் கொள்ளுங்கள் என பதிவு செய்துள்ளார்.

குஷ்புவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கு குண்டாக இருக்கும் குஷ்புதான் மிகவும் பிடிக்கும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

விஷால் ரொம்ப Strict-ஆ இருப்பாருன்னு நினைச்சேன்! – Actress Mirnalini Ravi Cute Speech |EnemyPressMeet