Kushbhoo and meena
ரஜினிக்காக மேடையிலேயே குஷ்பூவும் மீனாவும் சண்டையிட்டு கொண்ட வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 168 படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா, குஷ்பூ ஆகியோர் நடிக்க ஓப்பந்தமாகியுள்ளனர்.

மீனா கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். குஷ்பூ 28 வருடத்திற்கு பிறகு இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் குஷ்பூவும் மீனாவும் ரஜினிக்காக சண்டை போட்டுள்ளனர். அந்த வீடியோவை நெட்டிசன்கள் ஒருவர் ஷேர் செய்து போதும் போதும் நிறுத்துங்க.. இரண்டு பேருமே படத்துல இருக்கீங்க என கலாய்த்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.