குருவி படத்தால் தான் ரொம்ப அசிங்கப்பட்டதாக பிரபல நடிகர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Kuruvi Movie : தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக வலம் வரும் சந்தானம், யோகி பாபு ஆகியோர் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர்கள் தான்.
இவர்களை போலவே திரையுலகில் அறிமுகமாகி காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் லொள்ளு சபா ஜீவா. இவர் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த குருவி படத்திலும் நடித்திருந்தார்.
இந்த படம் குறித்து ஜீவா பேட்டி ஒன்றில் இந்த படத்தில் விவேக் சாரின் பேக்கை நான் புடிங்கி செல்வது போல காட்சி இருக்கும்.அதன் பின்னர் என்னை பிடித்து தம்சம் செய்து விடுவார்கள்.
இப்படத்திற்கு பிறகு நான் சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு வேலை பார்த்த சிறுவன் ஒருவன் நான் சென்ற இடங்களுக்கு எல்லாம் பின்னாடியே வந்தான். ஏன்டா இப்படி பின்னாடியே வர என்று கேட்டதற்கு நீங்க தூக்கிட்டு ஓடிடுவீங்க என கூறினான்.
அந்த சிறுவன் சொன்ன வார்த்தையில் இருந்து நான் புரிந்து கொண்டது நிஜ வாழ்க்கையையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது என்பதை தான் என கூறியுள்ளார்.