பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்று கமல்ஹாஸனிடம் கதை விட்ட அபிஷேக் ராஜாவிற்கு குறும்படம் ஒன்றை நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர்.

Kurumpadam For Abishek Raja : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் இரண்டாவது எலிமினேஷன் நேற்று நடைபெற்றது. அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த படி அபிஷேக் ராஜா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆற்றல் தரும் ஐந்து சிவ மந்திரங்கள்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்று கதை விட்ட அபிஷேக்.. குறும்படத்தை வெளியிட்ட போட்டியாளர்

உலக நாயகன் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் பேசும்போது நான்கு சீசன்களையும் பார்த்துவிட்டு நீங்கள் உள்ளே வந்து இருக்கிறீர்கள் என கூறினார். அதற்கு அபிஷேக் ராஜா நான் இதுவரை பார்த்ததில்லை என கூறினார். அதன் பிறகு எப்போதாவது புரோமோ வீடியோ மட்டும் பார்பேன் என சொன்னார். இந்த நிலையில் நாடியா சாங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அபிஷேக் ராஜா தன்னை அடுத்த வனிதா என கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காத அவருக்கு எப்படி இவர்தான் அடுத்த வனிதா என தெரியும் என்கிற கோணத்தில் அவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

Live ஆக சிலம்பம் சுற்றி அசத்திய Vijay-யின் தங்கை – Viral Video

இதனைப் பார்த்த ரசிகர்கள் அபிஷேக் ராஜாவை கிண்டலடித்து வருகின்றனர்.