Kurumpadam About Shivani and Bala

பிக் பாஸ் வீட்டுக்குள்ள பாலா மற்றும் சிவானி செய்யும் வேலையை குறும்படமாக வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

Kurumpadam About Shivani and Bala : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் 18 போட்டியாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இதில் பாலா மற்றும் சிவானி ஆகியோருக்கு இடையே காதல் டிராக் ஓடிக்கொண்டிருக்கிறது. இருவரும் இடையே காதல் இருக்கா இல்லையா என்பதே இல்லை தெளிவாக தெரியவில்லை.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் அங்கும் இங்குமாக ஒன்றாக நின்று மொக்கை போட்டுக் கொண்டிருந்த காட்சிகளை ஒன்று சேர்த்து நெட்டிசன்கள் குறும்படமாக வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவர்களில் ஜோடியை விரும்பும் ரசிகர்கள் சிவாலா என்ற பெயரில் இந்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சிவானி என்பதிலிருந்து சிவா என்ற வார்த்தையின் பாலா என்ற வார்த்தையிலிருந்து லா என்ற எழுத்தையும் சேர்த்து சிவாலா என புதிய பெயரை உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.