Kuralarasan wedding
Kuralarasan wedding

Kuralarasan wedding – நடிகர் சிம்புவின் சகோதரரும் டி.ராஜேந்தரின் மகனுமான குறளரசன் அண்மையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

இவர் ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலிப்பதாகவும் இதற்காகதான் இவர் மதம் மாறுவதாகவும் அந்நேரத்தில் சொல்லப்பட்டது.

இது தற்போது உறுதியாகிவிட்டது. குறளரசன் நபீலா அகமது என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளார்.

இவர்களுடைய திருமணம் வரும் ஏப்ரல் 29-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இவர்களது திருமண பத்திரிகையும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தற்சமயம் லண்டனில் இருக்கும் சிம்பு, திருமணத்திற்குள் சென்னை திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது.

Kuralarasan wedding
Kuralarasan wedding