Kuralarasan Marriage

Kuralarasan Marriage : நடிகர் சிம்புவின் சகோதரரும் டி.ராஜேந்தரின் மகனுமான குறளரசனின் திருமணம் அண்மையில் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது.

தான் காதலித்த பெண் ஒரு இஸ்லாமியர் என்பதால் திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு தனது தந்தையின் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் குறளரசன்.

மேலும் கடந்த ஒரு மாதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரையும் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா உட்பட திரைப் பிரபலங்கள் பலரையும் சந்தித்து தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பு கொடுத்துவந்தார் டி.ஆர்.

சிம்புவா இது? – லண்டனில் இருந்து வெளியான புகைப்படம்.!

அண்மையில் குறளரசன் – அபீலா அஹ்மத் ஆகியோரது திருமணம் சென்னை அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நடைபெற்றது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது தம்பி திருமணத்தை புறக்கணித்ததாக ஒரு செய்தி வெளியாகி இணையத்தில் தீயாய் பரவியது.

ஆனால் உண்மை என்னவென்று விசாரித்தால் உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டன் சென்ற சிம்பு, தனது தம்பி திருமணத்திற்காக உரிய நேரத்தில் சென்னை திரும்பிவிட்டாராம்.

மீண்டும் கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் ரஜினி – இந்தமுறை இப்படியொரு கூட்டணியா?

மேலும் தனது தம்பி மீது அதீத பாசம் கொண்ட சிம்பு, திருமணம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று விழாவை அலங்கரித்தாராம். தம்பி குறளரசன் உடன் சிம்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஆனால் இது தெரியாமல் வழக்கம்போல சிலர் சிம்புவுக்கு எதிராக நெகடிவ்வான செய்தியை பரப்பியுள்ளனர். மேலும் நாளை நடைபெறவிருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் சிம்பு பங்கேற்பார் என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.