Kuralarasan

Kuralarasan : சிம்புவின் தம்பி மதம் மாறியது ஏன்? என்ற காரணங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகியுள்ளது.

டி. ராஜேந்திரன் இளைய மகன் குறளரசன். இசையமைப்பாளராக சில படங்களில் பணி புரிந்துள்ளார். இவர் சமீபத்தில் தன்னுடைய தாய் தந்தையர் முன்னிலையில் முஸ்லிமாக மாறியதாக வீடியோ ஒன்று வெளியானது.

அப்பா முன்னிலையில் வேறொரு மதத்திற்கு மாறிய சிம்புவின் தம்பி – வைரலாகும் வீடியோ.!

ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரை போலவே உச்சத்தை அடைய குறளரசன் மதம் மாறியதாக தகவல்கள் பரவி வந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் குறளரசன் முஸ்லீம் பெண் ஒருவரை காதலித்து வருகிறாராம்.

அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் மதம் மாற வேண்டுமென பெண் வீட்டார் கூறியுள்ளனர்.

டி.ராஜேந்தர் எம் மதமும் சம்மதம் என்பவர் என்பதால் முஸ்லிமாக மாறி கொள்ள ஒப்பு கொண்டுள்ளார். அதன் பின்னர் குறளரசனும் மதம் மாறியுள்ளார். விரைவில் இவருக்கு திருமணமும் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.