Kuppathu Raja Trailer : ஜி.வி பிரகாஷ் மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்துள்ள குப்பத்து ராஜா படத்தின் ட்ரைலர் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி. வி பிரகாஷ். இவர் தற்போது பல படங்களை கை வசமாக வைத்து கொண்டிருக்கிறார்.
இவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சர்வம் தாளமயம் படத்தை தொடர்ந்து ஆர்.எஸ் பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள திரைப்படம் குப்பத்து ராஜா.
இந்த படத்தில் ஜி.வி ப்ரகாஷுடன் இணைந்து பார்த்திபன், எம்.எஸ் பாஸ்கர், பூனம் பாஜ்வா, பல்லக் லால்வாணி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எஸ். போகஸ் சரவணன் அவர்கள் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி இருந்தது. ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட், சென்னை பாஷை என முழுக்க முழுக்க தர லோக்கலாக வெளியாகி இருந்த ட்ரைலர் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரையும் கவர்ந்திருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் யூ ட்யூபிலில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.
#KuppathuRaja Trailer crossed One Million views!
▶ https://t.co/j5JmlLeKHV#1MillionforKuppathuRaja@gvprakash @Timesmusicsouth @saravanfocuss @ProSfocuss @donechannel1 @cinemainmygenes @VanquishMedia__ @SevenSri pic.twitter.com/kS5MI9Q1vV
— Kalakkal Cinema (@kalakkalcinema) March 11, 2019