Kupparthu Raja Trailer

Kuppathu Raja Trailer : ஜி.வி பிரகாஷ் மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்துள்ள குப்பத்து ராஜா படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி. வி பிரகாஷ். இவர் தற்போது பல படங்களை கை வசமாக வைத்து கொண்டிருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சர்வம் தாளமயம் படத்தை தொடர்ந்து ஆர்.எஸ் பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள திரைப்படம் குப்பத்து ராஜா.

இந்த படத்தில் ஜி.வி ப்ரகாஷுடன் இணைந்து பார்த்திபன், எம்.எஸ் பாஸ்கர், பூனம் பாஜ்வா, பல்லக் லால்வாணி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எஸ். போகஸ் சரவணன் அவர்கள் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ட்ரைலரின் ஆக்ஷன் எமோஷனல் ரொமான்ஸ் என அனைத்தும் கலந்து ஒரு பக்கா கமர்சியல் படமாக உருவாகி இருப்பது படத்தின் ட்ரைலரில் தெள்ள தெளிவாக தெரிவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.