Kuppathu Raja Sensor : ஜி.வி பிரகாஷ் மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்துள்ள குப்பத்து ராஜா படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ளது. அதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி. வி பிரகாஷ். இவர் தற்போது பல படங்களை கை வசமாக வைத்து கொண்டிருக்கிறார்.
இவரது நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.எஸ் பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள திரைப்படம் குப்பத்து ராஜா.
இந்த படத்தில் ஜி.வி பிரகாஷுடன் இணைந்து பார்த்திபன், எம்.எஸ் பாஸ்கர், பூனம் பாஜ்வா, பல்லக் லால்வாணி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எஸ். போகஸ் சரவணன் அவர்கள் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட், சென்னை பாஷை என முழுக்க முழுக்க தர லோக்கலாக வெளியாகி ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரையும் கவர்ந்திருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் சென்சார் பணிகளும் நிறைவடைந்து படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Kuppathu Raja Censored with U/A Certificate.. Movie release On April 5th#KuppathuRajaCensoredUA@gvprakash @rparthiepan @saravanfocuss @ProSfocuss @donechannel1@TimesMusicSouth @cinemainmygenes @VanquishMedia__ @SevenSri pic.twitter.com/cnp6DUWnOk
— Kalakkal Cinema (@kalakkalcinema) March 22, 2019