Kuppathu Raja

Kuppathu Raja Movie : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி. வி பிரகாஷ். இவரது நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

இவரது நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.எஸ் பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள திரைப்படம் குப்பத்து ராஜா.

ஏப்ரல் 5-ம் தேதி உலகம் முழுவதும் இந்த படத்தில் ஜி.வி பிரகாஷுடன் இணைந்து பார்த்திபன், எம்.எஸ் பாஸ்கர், பூனம் பாஜ்வா, பல்லக் லால்வாணி, மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ். போகஸ் சரவணன் அவர்கள் தயாரித்துள்ளார்.

ஆக்ஷன், ரொமான்ஸ் என பட்டய கிளப்பும் குப்பத்து ராஜா ட்ரைலர்.!

இப்படத்தின் ட்ரைலர் ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட், சென்னை பாஷை என முழுக்க முழுக்க தர லோக்கலாக வெளியாகி ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரையும் கவர்ந்திருந்தது.

அதனை தொடர்ந்து தினம் தினம் இப்படத்தை குறித்த சுவாரஷ்ய தகவல்கள் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தற்போது காமெடி நடிகர் சதிஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தரமான தல லோக்கலான சம்பவத்திற்காக காத்து கொண்ருக்கிறேன் என கூறி படக்குழுவிற்கு வாழ்த்து சொல்லி ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.