Pandian Stores Kumaran Salary
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க எவ்வளவு சம்பளம் என குமரன் ஓப்பனாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூன்று ஜோடிகள் இருந்தாலும் அதிகம் ரசிக்கப்படுவது குமரன் – முல்லை ஜோடி தான்.

நிஜத்தில் இவர்கள் எலியும் பூனையுமாக இருந்து வருவதாகவும் நிகழ்ச்சி எதிலும் சேர்ந்து கலந்து கொள்வதில்லை எனவும் குற்றசாட்டுகள் எழுந்து வந்தன.

ஆனால் நாங்கள் நட்பாக தான் இருக்கிறோம், எங்களுக்கிடையே எந்தவித பிரச்னையும் இல்லை என இருவரும் வீடியோ ஒன்றின் மூலமாக விளக்கம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் குமரனிடம் சீரியலில் நடிக்க உங்களின் சம்பளம் எவ்வளவு என கேட்டதற்கு அவர் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒரு நாளைக்கு ரூ 8,000 தான் வாங்குவதாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.