பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து குமரன் விலகுவதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

Kumaran About Pandian Stores : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து விலகல்? குமரன் அளித்த விளக்கம்

இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இந்த பதிவால் திரைப் படங்களில் நடிப்பதற்காக குமரன் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் நான் பதிவிட்ட பதிவிற்கு இது அர்த்தமில்லை. விருது கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்படக் கூடாது. நம்முடைய வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் அதை பதிவு செய்திருந்தேன். அதனை தவறாக புரிந்து கொண்டார்கள். நான் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து விலகுவதாக பரவிய தகவல் வெறும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளார்.

குமரன் இவ்வாறு விளக்கம் அளித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.