Kuldeep Yadav Open Talk :

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக ஜொலித்து வருகிறார், மேலும் மே மாதம் 30 – ஆம் தேதி தொடங்க உள்ள உலக கோப்பை போட்டியில் குல்தீப் யாதவ் இந்திய அணியில் இடம் பிடித்து உ‌ள்ளார் .

இந்த சுழலில் குல்தீப் யாதவ் களத்தில் தோனி கொடுக்கும் ஆலோசனைகள் குறித்து மனம் திறந்து பேசினார்.

தொடர் நாயகன் விருது வென்று புதிய சாதனை செய்த தோனி!

அப்படி அவர் தெரிவித்த கருத்து தற்போது மிகவும் பெரிய அளவில் பேசப்படத் தொடங்கி உள்ளது. அதற்கான விளக்கத்தையும் தற்போது குல்தீப் தெரிவித்து உள்ளார்.

தோனி அதிகமாக வந்து நம்மிடம் பேசிக்கொண்டிருக்க மாட்டார். ஆனால் பந்து வீச்சில் மாற்றம் அல்லது விக்கேட் எடுப்பதில் எதாவது டிப்ஸ் வழங்கவேண்டும் என நினைத்தால் அதை நம்மிடம் சொல்வார்.

ஆனால் பலமுறை தோனியின் முடிவுகள் தவறாகியுள்ளது. ஆனால் அதை நாம் அவரிடம் சொல்ல முடியாது என கூறியதாக நேற்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த குல்தீப் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, இங்கே எந்தவித காரணமில்லாமல் மலிவான வதந்திகளை உருவாக்க விரும்பும் நமது மீடியாக்ளின் மற்றொரு சர்ச்சையில் சிக்கி கொண்டிருக்கிறோம்.

சில நபர்களால் இந்த செய்தி பரவி வருகிறது இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது.

மதிப்பிற்குரிய தோனி குறித்து நான் எந்தவொரு விரும்பத்தக்காத செய்தியும் கொடுக்கவில்லை என் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.