Kubera Malai Herbal Meditation Center Opening
Kubera Malai Herbal Meditation Center Opening

குமரியில் ஸ்ரீ குபேர மலையில் மூலிகை தியான மண்டபம். மதநல்லிணக்க ஒற்றுமையோடுகலப்பை மக்கள் இயக்கம் தலைவர் PT செல்வகுமார் திறந்து வைத்தார்.

Kubera Malai Herbal Meditation Center Opening : மருந்துவாழ்மலை ஐயன்மலை பொட்டல்குளம் மூலிகை தியான மண்டபத்தை தயாரிப்பாளரும் இயக்குனருமான PT செல்வகுமார் திறந்து வைத்தார். மும்மதமும் சம்மதம் என்ற நோக்கத்தோடு அனைத்து மத தலைவர்களையும் வரவழைத்திருந்தார்.

மூலிகை மண்டபத்தை திறந்து வைத்து பத்திரிகையாளர் சந்திப்பில் PT செல்வகுமார் பேசியதாவது:

இந்தியாவின் தென் எல்லையான குமரியில் மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் இடமாக மருந்துவாழ்மலை உள்ளது. திருவிதாங்கூர் மன்னர்களும் சித்தர்களும் பயன்படுத்திய அபூர்வ மூலிகைகள் இந்த மலையில் உள்ளது. பல நாட்டு ராஜாக்களுக்கு இந்த மூலிகைகள் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் தியானம், யோகா, மனவளர்ச்சி போன்றவை மேற்கொள்ளலாம். மேலும் மூலிகை நிறைந்த காற்றை சுவாசிக்கும் போது மன நிம்மதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கும். இந்த மலையில் இருந்து வரும் காற்றில் நூறு சதவிகிதம் ஆக்சிஜன் உள்ளது.

ஏழை எளியவர்கள் மீது போடப்பட்ட கொரொனா வழக்குகளை வாபஸ் பெறுங்கள் – தமிழக முதல்வருக்கு கலப்பை PT செல்வகுமார் வேண்டுக்கோ!

இந்த மலையை சுற்றி வாழும் மக்களுக்கு கேன்சரோ, ஆஸ்துமாவோ வருவதில்லை. இன்று மக்கள் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் மன அமைதியாக வாழ தியானம் மிகவும் அவசியம். அதனால் அபூர்வ சக்தி கொண்ட இந்த இடத்தில தியான மண்டபத்தை கட்டினோம் என்று பேசினார்.

இந்நிகழ்வில் தியாகராஜ சுவாமிகள் தலைமை தாங்கினார். சாமிதோப்பு நிறுவன தலைவர் பால பிரஜாபதி அடிகளார், குமரி மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமா அத் கூட்டமைப்பு பொருளாளர் ஷபீக், வெள்ளிமலை சைதன்யானந்தஜி மகாராஜ், நாமரிஷி யோகி பொன்காமராஜ், கலப்பை சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், கலப்பை குமரி மாவட்ட தலைவர் சிவபன்னீர் செல்வம், கலப்பை இளைஞரணி செயலாளர் தனசேகர், கலப்பை மாவட்ட செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், கலப்பை மகளிரணி தலைவி ஸ்ரீ ரெங்கநாயகி, மற்றும் கலப்பை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.