நடிகர் தனுசுக்கு ஜோடியாக விஜய் சேதுபதியின் ரீல் மகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kriti Shetty Pair With Dhanush : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படம் மட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பில் அரை டஜன் படங்கள் வெளியாகி வருகின்றன. இப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாலாஜி முருகதாஸ் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக உப்பேனா படத்தில் நாயகியாக நடித்த க்ரித்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி க்ரித்தி ஷெட்டியின் அப்பாவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுசுக்கு ஜோடியாக உப்பேனா நடிக்க வெளியான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி விட்டது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.