Kriti shetty About Dhanush Movie

நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் கிர்த்தி ஷெட்டி.

Kriti shetty About Dhanush Movie : தெலுங்கு சினிமாவில் வெளியான உப்பேனா என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் கிர்த்தி ஷெட்டி. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் அந்த படத்தை பாலாஜி மோகன் இயற்கை இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார் கிர்த்தி ஷெட்டி. அதாவது எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் மூன்று படங்களில் மட்டும் ஒப்பந்தமாகி உள்ளேன்.

வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என கூறி தனுசுக்கு ஜோடியாக நடிப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.