Krithika Udhayanidhi Next Hero

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கும் மூன்றாவது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Krithika Udhayanidhi Next Hero : தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. உதயநிதி ஸ்டாலினின் மனைவியான இவர் முதல் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி வைத்து காளி என்ற படத்தினை இயக்கி இருந்தார்.

இந்த படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிருத்திகா தற்போது மூன்றாவது படத்தை இயக்க தயாராகி வருகிறார். முதலில் இந்த படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அது முழுக்க முழுக்க வதந்தி என்பது தற்போது தெரிய வந்தது. இதனால் அஸ்வின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே ஜெயராம் தன்னுடைய மகனுடன் ஸ்டாலினை சந்தித்து வெற்றி பெற்றதற்காக வாழ்த்து சொன்னதாகவும் கூறப்பட்டு வருகிறது. ‌