Krishnam

Krishnam Movie Review : PN பலராமன் தயாரிப்பில் தினேஷ் பாபு இயக்கத்தில் அக்ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ், ஷாந்தி கிருஷ்ணன், சசிகுமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கிரிஷ்ணம்.

கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கல்லூரி கலாட்டாக்களுடன் குருவாயூரப்பாவின் மகிமையை பேசும் படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.

கதைக்களம் :

கேரளாவில் கோட்டீஸ்வரர் ஒருவருக்கு மூன்று மகன்கள். இதில் மூன்றாவது மகன் தான் அக்ஷய் கிருஷ்ணன் ( படத்தின் நாயகன் ). இவருக்கு திடீரென ஒரு நோய் தாக்கி விடுகிறது. இது 10 லட்சத்தில் ஒருவருக்கு ஏற்பட கூடிய கொடூர நோய் காப்பாற்றுவதற்கு ஒரே ஒரு அறுவை சிகிச்சை தான் வழி. அதிலும் உயிர் பிழைக்க வெறும் 1 % தான் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறி விடுகின்றனர்.

இந்த குடும்பமே குருவாயூரப்பரின் தீவிர பக்தர்கள். அக்ஷய் கிருஷ்ணனின் பெற்றோர்கள் குருவாயூரப்பவரை வேண்டி கொள்கின்றனர். அவரை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.

இவர்களுக்கு அந்த குருவாயூரப்பன் எப்படி உதவினார். அந்த இளைஞன் எப்படி மரணத்தின் விளிம்பில் இருந்து உயிர் பிழைத்து வந்தான் என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

கதையை பற்றிய அலசல் :

நிஜ வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதை அப்படியே படமாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞனே நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது. கடவுள் பக்தி உள்ளவர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். ஒரு சில இடங்களில் மட்டும் சில திருத்தங்களை செய்திருக்கலாம்.

நடிகர் நடிகைகளின் நடிப்பு :

அக்ஷய் கிருஷ்ணன் :

விஜய் வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட இளைஞனே இப்படத்தின் நடித்துள்ளார். இதனால் அவருடைய வலியும் வேதனைகளும் நம் கண் முன்னே வந்து நிற்கும் அளவிற்கு நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா உல்லாஸ் :

இப்படத்தில் கதாநாயகிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார்.

சசிகுமார் :

சசிகுமார் என்பவர் இந்த படத்தில் நாயகனுக்கு அப்பாவாக நடித்துள்ளார்.நிச்சயம் இவரது நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு மகனிடம் ஒரு தந்தையாகவும் நண்பனாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் தன்னுடைய நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஷாந்தி கிருஷ்ணன் :

ஷாந்தி கிருஷ்ணன் நாயகனுக்கு அம்மாவாக நடித்துள்ளர். அவருடைய கதாபாத்திரத்தையும் அவர் சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

இந்த படத்திற்கு ஹரி பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசை எமோஷன்களை கூட்டுகிறது. ஒளி சிந்தும் காதல் மற்றும் சில பாடல்கள் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது.

எடிட்டிங் , ஒளிப்பதிவு :

எடிட்டிங், ஒளிப்பதிவு போன்றவையும் சிறப்பாக அமைந்துள்ளது. சில இடங்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனத்தை செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் கிரிஷ்ணம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடி ஒரு படம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இப்படம் கடவுளின் மீதான பக்தியை மேலும் அதிகரிக்கும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.