Krishnam Movie

Krishnam Release Date : கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம் ‘ என்கிற பெயரில் பக்திப் படமாகிவுள்ளது. இந்த படம் வரும் மார்ச் 15-ம் தேதி ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் உள்ள ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று பிள்ளைகள். அந்தக் குடும்பமே கிருஷ்ண பக்தர்கள் கொண்ட குடும்பம்.

நன்றாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு நாள் புயலடித்தது. கோடீஸ்வரரின் 3வது பையனுக்கு இதயத்தில் ஒரு நோய். Chronic Constrictive Pericarditis என்பது நோயின் பெயர்.

அது 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் நோய். மருத்துவம் உண்டா என்றால் உண்டு தான்.ஆனால் அறுவை சிகிச்சைக்கு நீண்ட நேரம் பிடிக்கும் .இச்சிகிச்சையில் பிழைக்கும் வாய்ப்பும் குறைவு தான். இருந்தாலும் குடும்பத்தினர் குருவாயூர் கிருஷ்ணனைப் பிரார்த்தனை செய்தனர், கிருஷ்ணனை நம்பினர்.

கிருஷ்ணனின் அருளால் அந்த இளைஞன் மரண படுக்கையில் இருந்து எப்படி மீண்டும் எழுந்தான் என்ற அற்புதத்தை இந்த குடும்பம் உலகுக்குக் காட்ட எண்ணி கிருஷ்ணம் என்ற பெயரில் படமாக்கியுள்ளனர்.

தமிழ்,மலையாள மொழிகளில் படம் தயாராகியுள்ளது. நோயில் பிழைத்த அதே இளைஞன் அக்ஷய் கிருஷ்ணனை நாயகனாக நடிக்க வைத்துள்ளனர். நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் என்பவர் நடித்துள்ளார்.

சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய் பாபு ,வினீத், ராஜீவ் பணிக்கர், ஜெயகுமார், அஞ்சலி உபாசனா ஆகியோரும் இப்படத்தின் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் நிஜ வாழ்வில் நடந்த குருவாயூர் கிருஷ்ணனின் அற்புதங்கள் இடம் பெறுகின்றன.

கதையைத் தயாரிப்பாளர் பி.என்.பலராம் எழுதியுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருப்பவர் தினேஷ் பாபு , இசை – ஹரிபிரசாத் , கலை இயக்கம் – போபன், படத்தொகுப்பு – அபிலாஷ் பாலசந்திரன் .

ஆக்ஷன் ரியாக்ஷன் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக PNB சினிமாஸ் தமிழகம் முழுவதும் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. உண்மையாக நடந்த சம்பவம் படமாகி இருப்பதால் மக்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.