Krishnam Movie Contest

டிக் டாக் செய்து அனுப்பினால் ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கப்படும் என கிருஷ்ணம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம்‘ என்கிற பெயரில் பக்திப் படமாகிவுள்ளது.

கேரளாவில் உள்ள ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று பிள்ளைகள். அந்தக் குடும்பமே கிருஷ்ண பக்தர்கள் கொண்ட குடும்பம்.

இந்த குடும்பத்தை சேர்ந்த மூன்றாவது மகனுக்கு திடீரென இதயத்தில் கோளாறு ஏற்பட கடும் சிரமத்திற்கு பிறகு குருவாயூர் கிருஷ்ணன் அருளால் அறுவை சிகிக்சை செய்யப்பட்டு குணமாகினார்.

இந்த உண்மை சம்பவம் தற்போது ஒரு பக்தி படமாக கிருஷ்ணம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞனே ஹீரோவாக நடித்துள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் இப்படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனத்தின் மூலமாக PNB சினிமாஸ் தமிழகத்தில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது.

இப்படத்தின் கதையைத் தயாரிப்பாளர் பி.என்.பலராம் எழுதியுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருப்பவர் தினேஷ் பாபு.

தற்போது இப்படத்தின் படக்குழுவினர்கள் கலக்கல் சினிமாவுடன் இணைந்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது இப்படத்தின் பாடல் ஒன்றிற்கு டிக் டாக் செய்து பதிவிட வேண்டும்.

பதிவிடும் போட்டியாளர்களில் சிறப்பாக டிக் டாக் செய்த மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஸ்மார்ட் போன் பரிசாக அளிக்கப்பட உள்ளது.

நீங்கள் டிக் டாக் செய்து பதிவிட வேண்டிய முறைகள் இதோ

ட்விட்டரில் #KrishnamMovieContest என்ற ஹேஸ்டேக்கில் @kalakkalcinema என்ற முகவரிக்கு டேக் செய்து பதிவிட வேண்டும். அல்லது முகநூல் பக்கத்திலும் @kalakkalcinema டேக் செய்து உங்களது வீடியோவை பதிவிடலாம்.

மேலும் மற்றொரு வழியாக டிக் டாக்கில் உங்களது வீடியோவின் லிங்கையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

உடனே டிக் டாக் செய்து உங்களது வீடியோவை பதிவிடுங்கள். ஸ்மார்ட் போனை வெல்லுங்கள்.

டிக் டாக் செய்ய வேண்டிய பாடலுக்கான லிங்க் இதோ

http://vm.tiktok.com/eNxm8X/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here