YouTube video

KPY Team About Vadivel Balaji : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.

இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக நேற்று சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார் – வருத்தத்தில் திரையுலகம்..!

இவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேற்று வடிவேல் பாலாஜிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய் டிவி பிரபலமான அமுதவாணன் அளித்த பேட்டி ஒன்றில் வடிவேல் பாலாஜி தன்னுடைய இறுதி ஆசை நிறைவேறாமலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

அதாவது அது இது எது என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை நடத்த வேண்டும் என ஆசைப்பட்டார். அதுமட்டுமல்லாமல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என கூறி வந்தார்.

தற்போது அவருடைய இந்த ஆசைகள் நிறைவேறாமலேயே இறந்து விட்டது எங்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.