Kovil Secrets

▪ ஆலயங்களிலும், தெய்வத் திருவுருவப் படங்களிலும் உள்ள கடவுள்களின் கை அமைப்பு பற்றிச் சொல்லும்போது அபய ஹஸ்தம், வரத ஹஸ்தம் ஆகிய சொற்களை நாம் பயன்படுத்துகிறோம்.

▪ அபய ஹஸ்தம் அல்லது அபய முத்திரை:
இறைவன் அல்லது இறைவியின் வலக்கை விரல்கள் மேல்நோக்கி நீட்டிய நிலையிலும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களுக்கு அடைக்கலம் தரும் நிலையிலும் இருப்பது அபய ஹஸ்தம் அல்லது அபய முத்திரை எனப்படும்.
இறைவன் பக்தர்களை நோக்கி நான் உங்களுக்கு அடைக்கலம் தருகிறேன்.
உங்களை நான் பாதுகாத்துக் கொள்வேன். கவலை இல்லாமல் நீங்கள் வாழலாம் என்று உணர்த்துவதுதான் அபயமுத்திரை.

▪ வரத ஹஸ்தம் அல்லது வரத முத்திரை:
இறைவன் அல்லது இறைவியின் இடது உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களின் பக்கமும், விரல்கள் திருவடிகளைச் சுட்டிக்காட்டும் நிலையிலும் இருக்கும் வடிவம் வரத ஹஸ்தம் அல்லது வரத முத்திரை எனப்படும். இதில் இறைவன் அல்லது இறைவி, “என் திருவடிகளை நீங்கள் சரணடைந்தால், அனைத்து நன்மைகளையும் அடைவீர்கள்; முழுமை பெறுவீர்கள்’ என்று உணர்த்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here